News
SEPTEMBER 2023
குரு உபதேசம் – 3813
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
முருகப்பெருமானால் படைக்கப்பட்ட உயிர்களுக்கு எவர் உண்ண உணவும், உடுக்க உடையும், நோய் துன்பம் தீர்க்க மருத்துவமும், தங்கி வாழ இடமும் தந்து, கல்வியும் தந்து, ஜீவதயவுடையோராய் நடந்து கொள்கிறாரோ, அவரே முருகப்பெருமானால் அங்கீகரிக்கப்பட்ட உண்மை ஆன்மீகவாதியாவான். ஜீவதயவற்றவன் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் ஆயிரம் ஆயிரம் அறநூல்களை கற்றவனாயினும், இனிமையாக பேசி மக்களை கவரும் உரையாற்றுபவனாயினும் சரி, அவரெல்லாம் போலி ஆன்மீகவாதிகளேயாவார் என்பதை அறியலாம்.