News
NOVEMBER 2023
குரு உபதேசம் – 3869
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
பலகோடி யுகம் தவம் செய்திட்ட முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜை செய்து முருகப்பெருமானின் ஆசிகளை பெறாவிட்டால் வறுமை தீராது, நோயற்ற வாழ்வு கிடைக்காது, செல்வ வளம் பெருகாது, விபத்துகளிலிருந்து தக்க பாதுகாப்பு கிடைக்காது, தூய மனம் பெற முடியாது, நேர்மையான வாழ்வை, அமைதியான வாழ்வை வாழ முடியாது, ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியாது, பிறவியை ஒழிக்க முடியாது, மரணமிலாப் பெருவாழ்வை ஒருபோதும் பெற முடியாது. ஆக அனைத்து செயல்களின் வெற்றியும் முருகப்பெருமானின் அருளாசிகளால் மட்டுமே முடியும் என்பதை அறியலாம்.