News
DECEMBER 2024
குரு உபதேசம் 4237
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : அகத்தியம் பெருமானாருக்கு அருள் செய்து ஒளி தேகத்தை அளித்து மரணமிலாப் பெருவாழ்வை அளித்து அருள் செய்து காத்ததைப் போல நாம் முருகனை வணங்க வணங்க, முருகனும் நம்மீது கருணை கொண்டு ஒரு கால பரியந்தத்திலே நமக்கும் அருள் செய்து நம்மையும் அருள் பார்வைக்கு உள்ளாக்கி அகத்தியருக்கு அருளியது போல நம்மையும் சார்ந்து வழிநடத்தி மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்வான் என்பதை அறியலாம்.
அதற்கு நாம் முருகப்பெருமானாரது ஆசியையும், அருளையும் அளவிலாது பெற வேண்டும். அதற்கு ஒரு நாள் இரண்டு நாள் போதாது, தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். முருகனது அருளைப் பெற முதலில் நாம் இதுவரை செய்து வந்த, உயிர்க்கொலை செய்து புலால் உண்பதை நிறுத்த வேண்டும்.
உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்வதோடு எண்ணம், சொல், சிந்தை, செயல் ஆகியவற்றிலும் சைவமாக இருப்பதோடு காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளும் வேளைக்கு குறைந்தது பத்து நிமிடமேனும் “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ தவறாது நாமஜெபங்களை மந்திரங்களாகச் சொல்லி உருவேற்றி வருவதோடு மாதம் குறைந்தது ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிப்பதை கட்டாயமாக செய்வதுடன் ஜீவதயவை மனதினுள் பெருக்கி எவ்வுயிர்க்கும் தீங்கு நினைத்திடாத மனதினையும் பெற்று முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி மனம் உருகி தொடர்ந்து பூஜை செய்ய செய்ய, முருகனருள் கூடி அனைத்தையும் பெற்று இறுதியில் முருகன் நம்மை சார்ந்து வழிநடத்திட சேராத இரு கலைகளையும், கலைகளை சேர்த்து பெற முடியாத மரணமிலாப் பெருவாழ்வையும் முருகனருளால் பெற்று அழிவிலாத நித்திய வாழ்வை வாழலாம்.
காரண குருவான கந்தனைப் போற்றிட
காரிய உடம்புள்ளே காணலாம் உண்மையே.