News
DECEMBER 2024
குரு உபதேசம் 4250
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சைவ உணவை மேற்கொள்ள வேண்டும் என்கிற அறிவும், அதற்குரிய சூழலும் வைராக்கியத்தையும் பெறுவதோடு கடவுள் உண்டு என்பதை ஏற்கும் மனப்பக்குவமும், கடவுளின் ஆசியால்தான் கடைத்தேற முடியும் என்பதையும் உணர்வதோடு அந்த கடவுள் முருகப்பெருமான்தான் என்பதையும் அறிகின்ற சிறப்பறிவையும் பெறுவதோடு பிற உயிர்கள் தமக்கு இரங்கி இதம் புரிவதே ஜீவதயவு என்றும் அந்த கடைத்தேற்றவல்ல ஜீவதயவினை முருகனை வணங்க வணங்கத்தான் பெற முடியும் என்றும், ஜீவதயவினை பெற்றால்தான் முருகனது ஆசியை பெற முடியுமென்றும், முருகனது ஆசியை பெற்றால்தான் நோயற்ற, வறுமையற்ற, மனஉளைச்சலில்லாத, பகையற்ற வாழ்வை வாழ முடியும் என்பதையும் அறிவதுடன், முருகனது அருளைப் பெற்றிட்டால் சைவத்தில் நின்று ஜீவதயவை கடைப்பிடித்து தான தருமங்களை தவறாது செய்து ஜீவதயவின் தலைவன் முருகனை தவறாது பூஜை செய்து முருகனது அருளை தொடர்ந்து பெற்று பெற்று இறுதியில் முருகனருளால் மரணமிலாப் பெருவாழ்வையும் பெறுதல் கூடும் என்பதையும் தெளிவாக அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
இன்பமாம் முருகனின் இணையடி போற்றிட
துன்பமும் இல்லை துயரமும் இல்லை.
இல்லையே துன்பம் இடரும் இல்லையே
தொல்லையும் இல்லை தோத்திரம் செய்திட.
சைவத்தலைவன் தாளிணைப் போற்றிட
வையகம் போற்ற வாழ்வது திண்ணமே.