News
DECEMBER 2024
குரு உபதேசம் 4253
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கையும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றுகின்ற அறிவைப் பெறலாம். ஜென்மத்தைக் கடைத்தேற்றிட கசடான தேகமதை முருகன் ஆசி பெற்று உணர்ந்திடவும், அறிவு ஏற்பட்டு பாவமும் புண்ணியமும் கலந்ததே உடம்பும் என்பதையும் பாவமாகிய களங்கம் நீங்கும் போது புண்ணியமாகிய ஒளி உடம்பை பெறலாம் என்பதையும் அறியலாம்.
களங்கமற்ற முருகனின் கழலிணை போற்றிட
களங்கமும் இல்லை காணலாம் உண்மை.
பல்லாயிரங் கோடி ஆண்டுகள் ஞானவழிதனை பின்பற்றி கடும் தவங்கள் செய்து பெறுதற்கரிய சிறப்பான ஞானமதை இச்சென்மத்தினிலே பெற்று அவதாரமாகி நிற்பவர்தான் ஓங்காரக்குடிலாசான் மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் என்பது மகான் நகுலன் வாக்காகும்.