News
DECEMBER 2024
![](https://www.agathiar.in/wp-content/themes/generatepress/assets/images/arrow-left.png)
குரு உபதேசம் 4261
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கையும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள விரும்பினால் முருகப்பெருமான் திருவடிகளை வணங்கினால்தான் அறிய முடியும் என்றும், முருகப்பெருமானின் ஆசியைப் பெற்றால்தான் இவை நான்கையும் அடைந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியும் என்பதையும் அறியலாம்.
அறம் பொருள் இன்பம் அருளிய முருகனை
திறம்பட பூஜிக்க சித்தியே உண்டாம்.
சித்தியும் உண்டாம் திருவடி பூஜையால்
முக்தியும் உண்டாம் மோட்சமும் உண்டாம்.
உண்டாம் நல்வினை ஓதி உணர்ந்திட
கண்டார்க்கு உண்டாம் கருத்து.
![](https://www.agathiar.in/wp-content/themes/generatepress/assets/images/arrow-right.png)