News
JANUARY 2025
குரு உபதேசம் 4268
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தை உணரவும், அதை நீக்கவும், அதற்குரிய வாய்ப்பினைப் பெற்றும், ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம். பிற உயிர்கள் படுகின்ற துன்பங்களைக் கண்டு மனமிரங்கி, அவ்வுயிர் படுகின்ற துன்பத்தை உணர்ந்து, அவ்வுயிரின் துன்பத்திலிருந்து அவ்வுயிரை காப்பாற்றி அவ்வுயிர்களை மகிழ்வித்து வாழ வைப்பதே தவம் என்பதை அறியலாம். இப்படிப்பட்ட தவமே ஜீவதயவாகும். ஜீவதயவு பெருக பெருக மனிதனாய் பிறந்து மிருகமாய் வாழ்கின்றவன்கூட மிருகாதி தன்மையை இழந்து மனிதன் மனிதனாவான். மனிதனாகிய மனிதன் ஜீவதயவு பெருக பெருக, மாமனிதனாய், தேவனாய் மாறி முடிவினிலே தன்னைத் தோற்றுவித்த இயற்கையையும் தாண்டி தன்னிகரில்லா தனிப்பெரும் தயவுடைத்தலைவன் முருகப்பெருமான் முதன்முதலாய் பெற்ற ஒப்பற்ற மரணமிலாப் பெருவாழ்வையும் பெறுவான். இவையனைத்தையும் நமக்கு அருளி வழிநடத்த வல்லவன் முருகனே! அவனின்றி ஓரணுவும் அசையாது என்பதை உணர்ந்து முருகனைப் பூஜித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
அருந்தவ முனிவன் ஆறுமுகனே
விரும்பிய அனைத்தும் விரைந்தே அருள்வான்.
அருள்வான் முருகனே அனுதினம் பூசிக்க
இருவினையும் இல்லை இடரும் இல்லையே!