News
FEBRUARY 2025

குரு உபதேசம் 4295
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட :
உலக நன்மைக்காக அவதரித்தவன்தான் முருகப்பெருமான் என்கிறதை அறிந்தபோதும் முருகனது ஆசியை பெற வேண்டுமாயின் முருகப்பெருமான் வகுத்த தூயநெறிகளை பின்பற்றிட்டால்தான் நாம் முருகனது ஆசியை பெறலாம் என்பதையும் அறியலாம்.
முருகப்பெருமான் ஆசியை பெற வகுத்த நெறிகளிலே மிக முக்கியமானதான உயிர்க்கொலை தவிர்த்தும், புலால் மறுத்தும், சுத்த சைவ உணவை மேற்கொண்டு சுத்த சைவ நெறிக்கு வந்து சைவநெறியை வழுவாது நின்று ஒருபோதும் புலால் உண்ணாதிருந்து ஜீவதயவை கடைப்பிடித்திட வேண்டும். தினமும் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும் முடிந்தால் நள்ளிரவு 12.00 மணிக்கு ஒரு 10 நிமிடமேனும் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ தவறாமல் நாமஜெபமாக சொல்லி மந்திர உருவினை தொடர்ந்து ஏற்றி வரவேண்டும். குறைந்தபட்சம் மாதம் இருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து ஜீவதயவை பெருக்கிட வேண்டும் என்கின்ற அடிப்படை நெறிகளை கடைப்பிடித்திட வேண்டும் என்பதையும் அறியலாம்.
இப்படி அடிப்படை தகுதிகளை நாம் பெற்றால்தான் அடிப்படையான கொள்கைகளை கடைப்பிடித்திட்டால்தான் முருகனது அருளையும், அவனது தயவையும், அவனது அன்பையும் உணரவோ, அறியவோ, பெறவோ முடியும் என்றும் இந்நெறிகளினின்று தவறினால் முருகனது அருளை பெறுவது சாத்தியம் குறைவுதான் என்பதையும் அறியலாம்.
