News
FEBRUARY 2025

குரு உபதேசம் 4304
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
உண்மை ஞானம் அடைகின்ற வழிமுறைகளை அறிவதோடு ஆன்மீகத்தின் பெயரால் தகுதியற்ற நபர்கள் ஞானிகளைப் போல் நடித்து சிவராஜ யோகத்தையோ, பிரணாயாம பயிற்சிகளையோ இராஜயோகம் என்றோ இன்னும் பலபல விதங்களிலே கடவுள் பெயரால் ஏமாற்றி பொருள் பறித்து வாழுகின்றவர்களெல்லாம் ஞானத்திற்கும் யோகத்திற்கும் தலைவனான முருகப்பெருமானால் தண்டிக்கப்பட்டு கொடுமையான நோயால் அவதிப்படுவர். பக்கவாதம், முதுகுபிளவை, புற்றுநோய் போன்ற தீராத நோய்களினால் சூழப்பட்டு யாரும் கிட்டே நெருங்க முடியாத வகையிலே துர்மணம் வீசிட நொந்து சாவார்கள் என்றும், இது அவர்களுக்கு முருகப்பெருமான் அளிக்கும் தண்டனை என்பதையும் அறிவார்கள்.
