News
JUNE 2022
குரு உபதேசம் – 3341
முருகன் காட்டிய ஜீவதயவின் பாதையில் செல்வான் முருகனின் பக்தரெல்லாம்.
ஆறுமுகன் திருவடியை போற்றுவோம் அருளையும், பொருளையும் பெறுவோம்.
புலவனாம் அருணகிரி புகன்ற அலங்காரம் புலவர்களே கற்று போற்றியே மகிழ்வர்.
பற்றற்ற அருணகிரி பகர்ந்த அலங்காரம் பற்றறவே கற்பர் பரிந்து.
பதம் பெற்ற அருணகிரி பகர்ந்த அலங்காரம் பதம் பெறவே கற்பர் பணிந்து.