News
JUNE 2022
குரு உபதேசம் – 3348
மனைவி, மக்கள், உடன் பிறந்தோர், தாய் தந்தையார், நண்பர்கள் இவர்களது துணை கொண்டே ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள கூடிய வாய்ப்பை பெறலாம். இல்லறத்தை ஞான வழி செல்ல, உற்ற துணையாய் அமைத்து இல்லறத்தையும், ஞான வழியையும் செம்மையாக செயலாற்றி இல்லறத் துணைகளுடன் இறைவனை அடையும் வழிதனிலே இனிமையுடன் சென்றிட துணையாய் ஆறுமுகனார் அருள்தனையும் பெறலாம்.
முருகனை போற்றுவோம் இகபர வாழ்வை செம்மையாக நடத்துவோம்.
அற்புதன் அருணகிரி அருளிய அலங்காரம் கற்பவருக்கே உண்டாம் களிப்பு.
கொற்றவன் அருணகிரி கூறிய அலங்காரம் கற்றவருக்கே உண்டாம் களிப்பு.
துரிசற்ற அருணகிரி சொல்லிய அலங்காரம் துரிசற கற்றிட துணையாம் இணையடி.