News
JUNE 2022
குரு உபதேசம் – 3354
இன்பமே முருகன் என்று அறிந்தே முருகனைப் பற்றி இன்பமே வாழ்வாய் அமைந்திட வாழ்வோம்.
புண்ணியன் அருணகிரி புகன்ற அலங்காரம் எண்ணிய தோறும் இனிக்குமே நெஞ்சம்.
தடையற்ற அருணகிரி சாற்றிய அலங்காரம் தடையற கற்றிட தான் அவனாமே.
ஏதமற்ற அருணகிரி இயற்றிய அலங்காரம் வேதமென்றே போற்றுவோர் வித்தகரே.
ஆற்றலாம் அருணகிரி அருளிய அலங்காரம் போற்றியே மகிழ்வர் புண்ணியரே.
புண்ணியனாம் அருணகிரி புகன்ற அலங்காரம் நண்ணியே கற்பவர் நலம் பெறுவர்.
நலம் பெற்ற அருணகிரி நாட்டிய அலங்காரம் நலம் பெறவே கற்றிடுவர் நயந்து.