News
JUNE 2022
குரு உபதேசம் – 3364
நீ என்னதான் உருகி உருகி பூசித்தாலும் சரி, முழுமை பலன் பெறமுடியாது. ஆதலால் உமது பூசை மரணத்தை வென்றவர்களும், பலகோடி யுகங்கள் வாழும் ஆற்றல் பொருந்திய மகான்களாகிய ஆறுமுகப்பெருமானார் தொட்டு அகத்தியர் முதல் வழிவழிவந்த மகான் அருணகிரிநாதர், திக்கெட்டும் புகழ்பெற்ற திருமூலதேவர், என்றும் பக்க துணையாய் இருக்கின்ற பதஞ்சலியார், பட்டினத்தார், நலம் பல தரும் நாவுக்கரசர், ஞானத்தலைவன் திருஞானசம்பந்தர், சுந்தரர், மகத்துவம் பொருந்திய மாமுனிவர் மாணிக்கவாசகர், நினைத்த அக்கணமே வந்து அருள் செய்யும் கருவூர்முனிவரும், காலாங்கிநாதரும், தாயினும் மிக்க தயவுடை தாயுமான சுவாமிகள், அன்பில் சிறந்த அழுகண்ணிச்சித்தர், இடைக்காடர், ஈடுஇணையில்லா இராமலிங்கசுவாமிகள், பராக்கிரமம் பொருந்திய வியாக்ரமர், புஜண்டமகரிஷி, வள்ளல் நந்தனார், வளமிக்க வியாசரிஷி என்றே இதுபோன்ற அருட்சோதி வடிவமாகி ஒளி பொருந்திய சூட்சுமதேகம் பெற்று சதகோடி சூரியபிரகாசமுடைய ஒளிபிழம்பாகி தான் வேறு, தலைவன் வேறு என்றில்லாமல் இரண்டற கலந்த ஒளிப்பிழம்பாகவும், கருணையே வடிவாகவும் உள்ள முதுபெரும் ஞானிகளை வணங்க வேண்டும்.