News
JULY 2022
குரு உபதேசம் – 3373
ஞானமென்பதே முருகன் திருவடிதான் என்றும், அவன் திருவடியைப் பற்றி பூசிப்பதே ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்றும், அவன் திருவடிப் பூசையே மரணமிலாப் பெருவாழ்வை தரும் என்றும் அறியலாம். முருகப்பெருமான் மரணமிலாப் பெருவாழ்வை முதன் முதலில் பெற்றவன் என்று உணர்வதோடு ஒரே தன்மை உடையவனாய் இருப்பவன். முருகப்பெருமானுக்கு உடல் வளர்ச்சியும், உடல் தளர்ச்சியும் இல்லை. ஓவியம் போன்று என்றும் மாறா அழகனாய் ஒரே தன்மையனாய் இருப்பவன் அத்தகைய அழகன், அமரன், ஆற்றல் பொருந்திய ஆறுமுகப் பெருமான் திருவடியைப் போற்றுவோம் அனைத்து நன்மையும் பெறுவோம்.