News
JULY 2022
குரு உபதேசம் – 3374
குற்றமற்ற அருணகிரி கூறிய அலங்காரம் கற்றறிய வேண்டுமே கருத்து.
பற்றற்ற அருணகிரி பகர்ந்த அலங்காரம் கற்றறிய வேண்டுமே கருத்து.
நலம் பெற்ற அருணகிரி நாட்டிய அலங்காரம் பலம் பெறவே கற்றிடுவர் பணிந்து.
பலம் பெற்ற அருணகிரி பாடிய அலங்காரம் நலம் பெறவே கற்றிடுவர் நயந்து.
அல்லலற்ற அருணகிரி அருளிய அலங்காரம் தொல்லையற வாழ்வோர்க்கு துணையாம்.
துணையாம் அருணகிரி தோற்றிய அலங்காரம் தினையளவேனும் கற்க திடமே.