News
JULY 2022
குரு உபதேசம் – 3380
முருகனே கதியென்றும், அவனே ஞானத்தலைவன் என்றும், ஞானமளிப்பவன் அவனே என்றும், உணர்ந்து உணவிலே சைவமும், தவறாது முருகனது திருவடிகளை மறவாது பூஜை செய்தும், தான தருமங்களை முறையாக செய்தும், தூய நெறிகளை கடைப்பிடித்து ஜீவகாருண்ய வழி நடந்து வரவர, முருகனின் அருள்கூடி தேகத்தினை மாற்றி ஞானதேகமாக ஆக்கிட வாய்ப்பும் வல்லமையும் பெற்று ஞானிகள் புடைசூழ ஞானியர் கூட்டம் உடன் துணைபுரிய ஞானத்தலைவன் வாசிநடத்தி கொடுக்க, நானிலம் போற்ற நன்னயமாய் தவங்களும் யோகங்களும் செய்துமே ஞானநிலையடைந்து மரணமிலாப் பெருவாழ்வையும் அடைந்திடுவான் முருகனருளால்.
கந்தவேலனை போற்றுவோம்! கடப்போம் பிறப்பை!
இனிய அருணகிரி இயம்பிய அலங்காரம் கனிவுடன் கற்றிட காணலாம் வீட்டை.
படிகண்ட அருணகிரி பகர்ந்த அலங்காரம் படிகண்டிட கற்பர் பணிந்து.
அப்பப்பா அருணகிரி அருளிய அலங்காரம் தப்பாமற் கற்பர் தணிந்து.
நிலைப்பெற்ற அருணகிரி நிகழ்த்திய அலங்காரம் நிலைபெற கற்றிடுவர் நிலைத்தே.