News
JULY 2022
குரு உபதேசம் – 3393
மனித வர்க்கம், சிந்திக்கவும் செய்ய முடியாத மிகப்பெரிய தவத்தை செய்து, காமதேகத்தை நீர்த்து ஒளிதேகம் பெற்ற முருகப்பெருமான் திருவடியை பூசித்து ஆசிபெற நினைப்பதுவே சிறந்த அறிவாகும். முருகப்பெருமான் உலக நலம் கருதியே அவதரித்த முதுபெரும் ஞானியும், கடவுளும் ஆவான். முருகா என்று சொல்லுகின்ற அத்தனைபேரும் எத்தகைய பாவம் செய்திருந்த போதிலும் சரி, அத்தனை பாவங்களும் நீங்கி தன்னைப் பற்றி அறியக் கூடிய சிறப்பு அறிவு உண்டாகும். முருகன் திருவடியை பூசிக்காதவனுக்கு முக்தி இல்லை, இல்லை என்பது சத்தியமாகும்.