News
SEPTEMBER 2022
குரு உபதேசம் – 3454
உடம்பிற்கு அதிக சக்தி தந்தால் காமத்தை உண்டு பண்ணுமென்றும், சக்தி தராவிட்டால் உடம்பு நலிந்து விடும் என்றும், மிகுதியான உணவு மிகுதி காமமாக மாறுவதினாலே காமம் அதிகமாகி ஞானம் கெட்டுவிடும். உணவு இல்லையேல் உடம்பு நலிந்து ஞானம் கெட்டுவிடும். உடம்பு என்பது உணவின் அடிப்படை, ஞானமும் யோகமும் உடம்பின் அடிப்படையில் வருவது. ஆதலின் உடம்பை காக்க உணவினை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ள வேண்டும். ஞானம் அடைய உடம்பை கட்டுப்பாடாக வைத்து கொள்ள வேண்டும். ஆக உடம்பும், உயிரும், யோகமும், ஞானமும், உணவின் அடிப்படையினால் வருகின்றபடியினாலே உணவே உடம்பாக, உணவே யோகமாக, உணவே ஞானமுமாக மாறுவதை அறிந்து உணவின் தன்மை அறிந்து உடம்பை காப்பாற்றி கொள்வான் அறிவுடையோன். உடம்பை காப்பாற்றி கொள்பவன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வான். இதற்கு ஞானபண்டிதன் அருளாசியில்லாமல் முடியாது. முருகனே நம்முள் சார்ந்து உணர்த்தினாலன்றி இதை அறிய முடியாது என்பதையும் உணர்ந்து முருகனது திருவடியை இறுகப்பற்றிக் கொள்வான். முருகன் திருவடியே வேதம் என்பதையும் முருகன் திருவடியை பற்றிடுவதே சாகாக்கல்வி என்பதையும் அறிந்து திருவடியைப் பற்றி பூஜிப்பான் முருகபக்தன்.