News
OCTOBER 2022
குரு உபதேசம் – 3477
முருகப்பெருமான் ஆசியை பெற விரும்புகின்ற மக்கள், உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ காலை பத்து நிமிடமும், மாலை பத்து நிமிடமும், இரவு பன்னிரண்டு மணிக்கு முடிந்தால் பத்து நிமிடமும் நாமஜெபத்தினை சலிப்பில்லாமல் செய்து வந்தால் முருகன் அருள் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.