News
DECEMBER 2022
குரு உபதேசம் – 3541
முருகனை வணங்கிட, உணவு, உடை, தங்கும் வசதி, பொருளாதாரம், தொண்டர் படையையும் தருவதோடு மட்டுமல்லாமல், தவத்திற்குரிய அறிவையும், அதற்குரிய சூழ்நிலையையும் அமைத்து தந்து, அந்த தவ முயற்சியுடையோரை சார்ந்து வழி நடத்தி சென்று, அவர் தம்மை வாசி வசப்படச் செய்து வாசி நடத்திக் கொடுத்து காயசித்தி செய்திட தேவையான மூலிகைகள், கற்பங்கள் என அனைத்தையும் தந்து காய சுத்தி செய்து, தவசியை தவம் முடிக்க செய்து, வாசியில் வெற்றி பெறச் செய்து அவனையும் தன்னைப் போல ஆக்கிக் கொள்வான் பெருங்கருணைத்தாய் முருகப்பெருமான்.
முருகப்பெருமானின் ஆசி பெற்ற மக்கள் மட்டுமே இகவாழ்விலும் பரவாழ்விலும் சித்தி பெறலாம்.