News
JUNE 2022
குரு உபதேசம் – 3344
பற்றற்ற ஞானியும், முற்றுப்பெற்ற முனிவனுமாகிய முருகப்பெருமான் திருவடியைப் பற்றுவதே ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்று அறியலாம்.
உற்றநல் அருணகிரி ஓதிய அலங்காரம் கற்றறிந்தாலே உண்டாம் களிப்பு.
களிப்புற்று அருணகிரி களறிய அலங்காரம் சலிப்பின்றி கற்றிட தான் அவனாமே.
அறத்தை வலியுறுத்தி அருளிய அலங்காரம் அறமே துணை என அறிதல் அறிவே.
சிந்தித்தால் முருகனை சிந்திக்க வேண்டும் ஜென்மத்தைக் கடைத்தேற்ற.