News
JUNE 2022
குரு உபதேசம் – 3345
காமவிகாரம் கட்டுக்கு அடங்கும், பேராசை இருக்காது, பொறாமை இருக்காது, கோபம் நீங்கி சாந்தம் உண்டாகும், பிற உயிர்கள்பால் கருணை உண்டாகும். முருகப்பெருமான் காமம் அற்றவன், பேராசை அற்றவன், பொறாமை இல்லாதவன், கோபம் அற்றவன், ஜீவதயவே வடிவானவன், அத்தகைய குணக்குன்றாம் முருகப்பெருமான் திருவடியைப் பற்றி பூசித்தாலன்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியாது என்பதை உணர்வான்.
கந்தனைப் போற்றினால் நிந்தனை இல்லை என்று அறியலாம்.
அப்பப்பா அருணகிரி அருளிய அலங்காரம் அப்பப்பா என்றே அகம் மகிழ்வரே அறிஞர்.
ஆசற்ற அருணகிரி அருளிய அலங்காரம் ஆசற கற்றிட அற்றிடும் பிறப்பே.