News
JUNE 2022
குரு உபதேசம் – 3370
மனிதவர்க்கத்திலேயே முதன்முதலில் உடல்மாசு, உயிர்மாசு, மனமாசுகளை கண்டறிந்து நீக்கி வெற்றி பெற்று மகானாக மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றவனாக யாவருக்கும் எட்டா அருட்ஜோதி நிலைதனை அடைந்து முற்றுப்பெற்றவன் மகான் முருகப்பெருமான் மட்டுமே. அவனே இவ்வுலகின் தோன்றிய உயிர்கள் ஏன் தோன்றுகிறது? ஏன் வளர்கிறது? ஏன் இறக்கிறது? என்பதற்கும் அவை வாழும் போது சீராக வாழாமல் நரை, திரை, மூப்பை அடைவது ஏன்? ஏன் நோயுறுகிறது? ஈளை இருமல் எதனால் வந்தது? மூப்பை வெல்லுவது எப்படி? நரை, திரை வராமல் காப்பது எப்படி? என்றெல்லாம் ஆராய்ந்து அதன் முடிவினிலே பரிணாமத்திற்கு உட்பட்ட எல்லா உயிர்களும் மனிதனும் கூட இவ்விதம் ஆவதை உணர்ந்து இயற்கையினால் உண்டான பரிணாம வளர்ச்சியின் அதிஆற்றல்தனை அந்த இயற்கையின் துணை கொண்டே தூள்தூளாக உடைத்தெறிந்து, என்றும் மாறா இளமை உடையோனாய் நித்திய பாலகுமரனாய், இளம் பூரணனாய் ஒளிப்பிழம்பாகி ஒப்பற்ற தலைவனாகி விளங்கி நின்றான் முருகப்பெருமான்.