News
JULY 2022
குரு உபதேசம் – 3396
பசி நோய், காம நோய், கோப நோய், பொறாமை நோய், முதுமை நோய், ஈளை இருமல் நோய், நிலையில்லாத உடம்பை நிலையென்று நம்புகின்ற நோய், நிலையற்ற பொருளை நிலையானதென்று நம்புகின்ற நோய், கணக்கிலடங்கா கற்பனை நோய், இன்னும் அநேகம் அநேகம் நோய்களையெல்லாம் நீக்கி, நோய்க்கு காரணம் உணர்த்தி, நமக்கு முருகனே குருவாய் நம்முள் அமர்ந்து நோய் நீக்கி, நோய் வரும் வழி நீக்கி தூய்மைப்படுத்தி ஞானம் அருளி மரணமிலாப் பெருவாழ்வையும் அருளி காத்து நம்மை கடைத்தேற்றி அருள்வான் முருகன்.