News
DECEMBER 2022
குரு உபதேசம் – 3526
முருகனை வணங்கிட, பொறாமை குணமும், பேராசையும், அளவு கடந்த கோபமும், பிறர் மனம் புண்படும்படி பேசுதலும் ஆகிய குணக்கேடுகளெல்லாம் பல ஜென்மங்களிலே செய்திட்ட பாவங்களினாலேதான் உண்டானது என்பதை அறியலாம். மாபெரும் தன்னிகரற்ற புண்ணியவானாகிய முருகப்பெருமானின் திருவடியைப் பற்றி பூஜித்தால் பொறாமை குணம் நீங்கும், பேராசை நீங்கும், கோபம் நீங்கும், பிறர் மனம் புண்படும்படி பேசுகின்ற குணக்கேடு நீங்கிவிடும் என்பதை அறியலாம்.