News
JANUARY 2023
குரு உபதேசம் – 3556
முருகனை வணங்கிட, முருகனே முன்னின்று தோன்றி அருளிச்செய்த மகான் நக்கீரப்பெருமான் எழுதிய கவிகளும், மகான் அருணகிரிநாதர் எழுதிய கவிகளும் இதுபோன்ற முதுபெரும் ஞானிகள் எழுதியதும், முருகப்பெருமான் ஆசிபெற்றவர்களாகிய சித்தர்கள் எழுதிய கவிகளாகிய திருமூலர் திருமந்திரம், அருணகிரிநாதரின் திருப்புகழ், நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை, திருவள்ளுவரின் திருக்குறள், ஒளவையாரின் ஒளவைக்குறள், அகத்தியர் கவிகள் மற்றும் தேவாரம், திருவாசகம் போன்ற ஞானக்கருத்துள்ள ஞானக்கவிகளே படிப்பதற்கு உகந்தது என்பதையும் உணரச் செய்து அக்கவிகளை படிக்கின்ற வாய்ப்பையும், படித்து உணரும் அறிவையும், உணர்ந்து ஞானியர் கூறிய வழியிலே நடந்திட தெளிவும், திடமும் அருள்வான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.