News
FEBRUARY 2023
குரு உபதேசம் – 3595
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… சித்தர்கோன் அகத்திய மகரிஷியின் ஆசியை பெறுவதோடு அவர் வழிவந்த ஞானவர்க்கத்தில் தோன்றிய நவகோடி சித்தரிஷி கணங்களின் ஆசியையும் பெறுவதோடு ஞானியாகுவதற்கான வாய்ப்பையும் பெறலாம். ஞானியாவதற்கு மூலகாரணமாக விளங்கி நிற்பவன் ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானே என்றும், அவனே அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கிற்கும் தலைவன் என்பதையும், அறம் பொருள் இன்பம் வீடு பேறு ஆகிய நான்கையும் அறிந்து கொள்ளவும், அதை அறிந்து கடைப்பிடிக்கவும், கடைப்பிடித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவும், முருகப்பெருமானே மூலகாரணமாய் விளங்கி அருள் செய்ய வல்லவன் என்பதையும் அறியலாம். முருகப்பெருமான் ஆசியினை பெற்று அறம் பொருள் இன்பம் வீடு பேறு ஆகிய நான்கையும் கைவரப் பெறுவதற்கு அந்த முருகப்பெருமானே ஆசி வழங்கினாலன்றி முடியாது என்பதையும் அறியலாம்.