News
MARCH 2023
குரு உபதேசம் – 3641
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
இதுநாள் வரையில் உலக மக்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வந்த ஜாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடுகள் முருகனது திருவருட் கருணையினாலே உலக மக்களெல்லாம் உண்மை நிலையுணர்ந்து பேதாபேதமற்று அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வையும், மனிதருக்குள்ளே பிறப்பால் உயர்வு தாழ்வில்லை, எல்லோரும் ஓரினம் எல்லா நாடுகளும் முருகனது நாடே, அனைத்து மொழிகளும் முருகனது மொழிகளே, அனைத்து இனமும் முருகனது இனமே எனும் ஒன்றுபட்ட சமுதாய எண்ணம் மேலோங்கி ஒன்றுபட்ட உலகம் முருகப்பெருமானால் இவ்வுலகினில் படைக்கப்படும் என்பதையும் அதற்குரிய காலமான ஞானசித்தர் காலம் துவங்கி விட்டதையும் அறியலாம்.