News
APRIL 2023
குரு உபதேசம் – 3649
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
சாதுசங்க தொடர்பு என்பது பக்திநெறியினில் அமையலாம், யோகநெறியில் அமையலாம் அல்லது ஏதோ வீண் ஆரவார பூஜைகளையும், ஆடம்பர பூஜைகளையும் கொண்ட சங்க தொடர்பும் அமையலாம். ஆனால் முருகனை வணங்க வணங்கத்தான், உண்மையான பக்தியுடைய, உண்மையான யோகம் அறிந்த, உண்மையான தவம் செய்திட்ட, உண்மையான ஞானம் அறிந்த, உண்மையான முக்தியை அறிந்த, உண்மையான சித்தியை அறிந்த சாதுசங்க தொடர்பை பெறுவார்கள். பக்தி, யோகம், ஞானம், முக்தி, சித்தியென ஞானத்தின் அத்துணைப் படிகட்டுகளையும் அறிந்தவர்களும், முழுமுதற் கடவுள் முருகனை முன்னிறுத்துகின்றவருமான உண்மையான சாதுவை, அதாவது சொற்குருநாதனை அடையாளம் கண்டு அவர்தம் திருவடிகளைப் பற்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்கின்ற வாய்ப்பையும் பெறுவார்கள்.