News
SEPTEMBER 2023
குரு உபதேசம் – 3814
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
வளரும் பருவமான பள்ளிப் பருவத்திலேயே மாணாக்கர்களது மனதினுள் பாவபுண்ணியங்களைப் பற்றியும், கடவுள் நம்பிக்கையும் வளர்க்க வேண்டும் என்பதும் அதற்கு சாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடற்ற முதுபெரும் ஞானிகள் நாமங்களை கொண்ட தொகுப்பாய் உள்ள சித்தர்கள் போற்றி தொகுப்பை பள்ளி ஆரம்பிக்கும் முன்னர் ஒவ்வொரு நாளும் மாணவர்கள் மனதில் பதியுமாறு பாராயணம் செய்து பின் பள்ளிகளை துவங்கிட மாணவர்களது நாமஜெப பலனால் நாட்டில் பருவமழை தவறாது பெய்து நாடு செழிக்கும் என்பதை அறியலாம்.