News
SEPTEMBER 2023
குரு உபதேசம் – 3818
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
உலக மக்களெல்லாம் எந்த மதமாயினும், எந்த நாடாயினும், எந்த இனமாயினும், எந்த மொழியாயினும் சரி, அவர் முருகா என அழைத்து விட்டால் அக்கணமே முருகனது நாமங்கள் சொன்ன அவர்தம் அழைப்பினை ஏற்று அருள் செய்வான் வல்லமைமிக்க முருகப்பெருமான்.
அன்பர் அழைப்பிற்கு இணங்கி அருளும் முருகனை மக்கள் அன்புடன் அழைத்தால் எவராலும் எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாத இயற்கை சீற்றத்தையும் நொடிப்பொழுதில் கட்டுப்படுத்தி இவ்வுலகை காப்பான் ஐந்தொழில் வல்ல அற்புத தலைவன் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.