News
FEBRUARY 2024
குரு உபதேசம் – 3958
முருகா என்றால், முருகனே புண்ணியமும் அருளும், முருகப்பெருமான்தான் அனைத்தும் என்றறிந்து புண்ணியத்தையும் பூஜையையும் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம். தொடர்ந்து அன்னதானமும் தொடர்ந்து பூஜையும் செய்ய செய்ய மனம் உருகும். மனஉருக்கத்திற்கு தடையாய் இருப்பது முன் செய்த பாவமே! முன்செய்த பாவமெல்லாம் போக்கிடும் படியாக வைராக்கியத்துடன் வினைதீர்க்க வல்ல முருகனின் நாமத்தையோ முருகனது வழி வந்த ஞானிகளின் நாமங்களை நாமஜெபமாக சொல்ல சொல்ல வினை நீங்கி மனஉருக்கம் ஏற்பட்டு ஞானிகள் ஆசிகளை பெறலாம். ஆயினும் பூஜையும் புண்ணியமும் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சைவ உணவை மேற்கொண்டாலன்றி சித்திக்காது.