News
MAY 2024
குரு உபதேசம் – 4027
முருகனை வணங்கிட, இப்பிறப்பு, மறுபிறப்பு, மீண்டும் பிறவாமை ஆகிய இரகசியங்களை முதன் முதலில் அறிந்து வென்று பிறவாமை எனும் மரணமிலாப் பெருவாழ்வை பெற்றவன்தான் முருகப்பெருமான் என்பதை அறியலாம். பசியின் கொடுமையால் உணவினது பெருமையையும், வறுமையின் கொடுமையால் செல்வத்தின் பெருமையையும், காமவிகாரத்தின் கொடுமையால் பெண்ணின் பெருமையையும், நோயின் கொடுமையால் மருத்துவரின் பெருமையையும் அறிந்து தெளிவது போல கடைத்தேற விரும்பி முயற்சி செய்து முன்னேற விரும்புகின்றபோது ஆன்மீக வழிதனை அறிய முற்படும் முயற்சிகளினால் முருகனின் பெருமையை உணரலாம். அன்றி முயற்சி இல்லாதவர்க்கு முருகன் பெருமை உணர்த்தல் ஆகாது. ஆதலின் முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு ஏற்ப முருகன் திருவடியைப் பற்றிட தொடர்ந்து முயற்சிக்க முயற்சிக்கத்தான் முருகனது பெருமையை உணர்ந்து முருகன் திருவடியைப் பற்றிட முடியும் என்பதையும் உணரலாம்.