News
NOVEMBER 2024
குரு உபதேசம் 4205
முருகன் திருவடியை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : இருவினையையும் அறிந்து இடரையும் வெல்லக்கூடிய அறிவைப் பெறலாம்.
திருமூலர் திருவடியை தினமும் போற்றிட
கருமூலம் கடக்க காட்டுமே உண்மை.
திருமூலர் திருவடியை தினமும் போற்ற
இருவினையும் இல்லை இடரும் இல்லையே.
ஐய்யன் மூலன் அருளைப் போற்றவே
வையகம் போற்ற வாழ்வது திண்ணமே.
திண்ணிய மூலன் திருவடியைப் போற்றிட
எண்ணிய அனைத்தும் எளிதில் சித்தியே.
புண்ணிய மூலன் பொன்னடி போற்றிட
நண்ணிய அனைத்தும் நல்கும் முக்தியே.
முக்தியும் உண்டாம் முனையும் திறந்திடும்
சித்தியும் உண்டாம் திருவடியை போற்றிட.