News
DECEMBER 2024
குரு உபதேசம் 4243
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பசி நீக்கும் எண்ணம் உள்ளவருக்கு முருகப்பெருமானின் ஆசி கிடைக்கும் என்பதை அறியலாம்.
கிடைத்தற்கரிய முருகன் திருவடி கிடைத்திட்டால்
கடைத்தேற உபாயம் காட்டுமே உண்மை.
பாடுபெறும் முருகனின் பாதம் பணிந்திட
வீடுபேறு காட்டுமே விரைந்தே.
படித்தேன் முருகனின் பாதத்தின் பெருமையை
நொடித்தே நலியா நுண்ணுணர்வு பெற்றேனே.
கற்றேன் முருகனின் கழலிணை பெற்றிட
பெற்றேனே பேரின்ப வாழ்வு பெருமையே.