News
JANUARY 2025
![](https://www.agathiar.in/wp-content/themes/generatepress/assets/images/arrow-left.png)
குரு உபதேசம் 4270
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட : முதன் முதலில் நரை, திரை, மூப்பு, பிணி மரணத்தை வென்ற முதல் தலைவன் ஞானபண்டிதன் முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம். முருகப்பெருமான் ஆசியைப் பெற்றால் நாமும் இவ்வித உன்னத நிலையைப் பெறலாம் என்பதையும் அறியலாம். முருகப்பெருமான் ஆசியைப் பெற விரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்வதோடு தினம்தினம் முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி குறைந்தது காலை பத்து நிமிடமும், மாலை பத்து நிமிடமும் முடிந்தால் இரவு பத்து நிமிடமும் “ஓம் முருகா” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, தவறாது பூஜை செய்து வர வேண்டும். மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து ஜீவதயவையும் பெருக்கிட, முருகன் அருள் கூடி, முருகனது ஆசியைப் பெறும் வாய்ப்பைப் பெற்று, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
பல்லாயிரம் அண்டம் பரவும் முருகனை
எல்லோரும் போற்றிடவே ஏற்றம் பெறுவர்.
![](https://www.agathiar.in/wp-content/themes/generatepress/assets/images/arrow-right.png)