News
FEBRUARY 2025

குரு உபதேசம் 4298
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் :
அறம், பொருள், இன்பம், வீடுபேறாகிய ஆகிய நான்கையும் முருகனது ஆசியால்தான் அறிய முடியும் என்றும், இவை நான்கிற்கும் தலைவன் முருகனே என்பதையும் அறியலாம்.
………………
குருத்தை அறிந்து குணம் பல காண முருகனின்
ருத்தை அறிந்தால் காணலாம் உண்மை.
கடந்தான் முருகனின் கழலிணை போற்றிட
திடமாம் அறிவு சித்தியும் உண்டாம்.
காலனை வென்ற கந்தனைப் போற்றிட
ஞாலத்தை வெல்ல நியாயம் கிட்டுமே.
புண்ணிய முருகனின் பொற்பதம் போற்றிட
எண்ணிய அனைத்தும் எளிதில் சித்தியே.
காலாங்கி நாதனின் கழலிணை போற்றிட
ஞாலத்தை ஆள நியாயம் கிட்டுமே.
