News
MARCH 2025

குரு உபதேசம் 4323
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
முற்றுப்பெற்ற ஞானிகள் ஆட்சியான ஞானசித்தர்கள் ஆட்சி காலத்திலே உலகத்தினில் ஏற்படுகின்ற ஞானியர் ஆட்சியானது ஜீவதயவினை அடிப்படையாக கொண்டதையும், அதன் ஒட்டுமொத்த தலைமை பொறுப்பை ஏற்று இவ்வுலகையே ஜீவதயவின் வழி, நடத்தி ஞானசித்தர் ஆட்சிக்கு தலைவனாக விளங்கி நிற்பவன், ஜீவதயவே வடிவானவரும் சதகோடி சூரியபிரகாசமுள்ள அருட்பெருஞ்ஜோதி வடிவான சரவணஜோதி சொரூபனான ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமான் என்பதையும் அறியலாம். அவனே தனது சொரூப நிலையினை அமைப்பாக்கி சரவணஜோதி அமைப்பை உருவாக்கி தலைவனாகி இவ்வுலகை சரவணஜோதி அமைப்பின் மூலம் இவ்வுலகை வழிநடத்தி செல்வான் என்பதையும் அறியலாம்.
