News
JUNE 2022
குரு உபதேசம் – 3351
ஓம் அகத்தீசாய நம என்று பத்து நிமிடம் மந்திர ஜெபம் செய்தும், உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். இவ்விதமே சுமார் ஆறு வருட காலம் தவம் செய்திட சைவத்தில் உணவை உண்டுவர வேண்டுமென்றும் அதன் பின்னர் மசாலா பொருட்கள் நீக்கி உடம்பை முறுக்கேற்றி நாடிநரம்புகளை தூண்டும் தீவிர உணவுகளான கொழுப்பு சத்து மிகுந்துள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி இன்னும்பல தீவிரகொழுப்பு பதார்த்தங்களை அறவே சேர்க்காமல் சைவத்தோடு இதையும் கடைப்பிடித்து சுத்தசைவ உணவை மேற்கொள்ள வேண்டுமென்றும் இவ்விதம் ஆறுவருட காலம் மேலும் தொடர்ந்து அதன்பின்னே உப்பு, புளி, காரம் என அறுசுவையும் நீக்கி உப்பில்லாத உணவை மேலும் ஆறுவருட காலம் வீரசைவத்தில் நின்று வீரசைவமான உணவுகளை மட்டும் உண்டு தவம் செய்திட வேண்டுமென்றும், ஆக சுமார் பதினெட்டு வருட காலம் தொடர்ந்து தவம் இயற்றுவதோடு எந்த பெண்ணோடும் தேகசம்பந்தம் இல்லாது தனித்திருந்து துறவுநிலை தவறாது மேற்கொள்ள தவம் சித்திக்கும் என்றும் உணர்வார்கள்.