News
JUNE 2022
குரு உபதேசம் – 3352
முருகன் அருள் கூடிய தவத்தில் சித்தியும் பெறுவார்கள். வெறும் உணவுக் கட்டுப்பாட்டாலோ, துறவாலோ தவசித்தி பெறமுடியாதென்றும் முருகன் அருள் கூடினாலன்றி தவம் சித்திக்காதென்றும், தவம் சித்திபெற உணவுக்கட்டுப்பாடும் அவசியம், துறவும் அவசியம் என்பதையும் உணர்வான், உணர்ந்த அவன் தவமே முருகனென்றும், முருகனே தவமென்றும், முருகன் அருளே தவசித்தி என்றும், முருகன் அருள் இன்றி தவசித்தி கைகூடாதென்பதையும் உணர்ந்திடுவான்.
நித்தியன் அருணகிரி நிகழ்த்திய அலங்காரம் நித்தமும் கற்றிட நிலைபெறுமே நித்தியம்.
அம்மம்மா அருணகிரி அருளிய அலங்காரம் அம்மம்மா என்றே அகம் மகிழ்வர் நல்லோர்.
எந்தை அருணகிரி இயம்பிய அலங்காரம் சிந்தையில் வைத்தே போற்றுவோர் நல்லோர்.
சத்தே முருகனென்று சாற்றிய அலங்காரம் சத்தே முருகனென்று அறிதல் அறிவே.
எந்தையே முருகா இறைவா என்றே போற்றுவோம் முருகனை எல்லா நலமும் எளிதில் பெறுவோம்.