News
JUNE 2022
குரு உபதேசம் – 3358
உயிர்ப்பலி செய்யாது இருப்பது நல்லது, உயிர் பலியிடும் கோவிலை கண்ணால் கூட காணாதிருப்பதும் நல்லதேயாம், உயிர்ப்பலி இடுவோரை கண்ணால் காண்பதே பாவம் என்றே உணர்ந்து பார்க்க நேரினும் சிரம்தாழ்த்தி பாராதிருந்தால் பாவத்தின் நிழல் நம் மீது படிவதை தவிர்க்கலாம் என்று அறிந்து கொள்வான் முருகனை வணங்கி போற்றுவோர்.
முருகனை போற்றுவோம்! ஜீவதயவை கடைப்பிடிப்போம்!
பணிவுடைய அருணகிரி பாடிய அலங்காரம் கனிவுடன் கற்றிட காணலாம் வீட்டை.
ஒளி பெற்ற அருணகிரி ஓதிய அலங்காரம் ஒளி பெறவே கற்பீர் ஓதி உணர்ந்து.