News
JANUARY 2023
குரு உபதேசம் – 3560
முருகா என்றால், உயிரினங்களிடத்து உள்ள பசியை அறிவதும், அதை நீக்கி அவ்வுயிர்களை இன்பமடைய செய்வதும், அதற்குரிய வாய்ப்பை பெறுவதுமே உயர்ந்த வேள்வி என்றும், பிற உயிர் பசிப்பிணி போக்கி மகிழ்வதே வேள்வியின் பயன் என்பதையும் அறியலாம். வேள்வியின் பயன் ஜீவதயவை தரவல்லதாய் இருக்க வேண்டும். பசிப்பிணியாற்றும் ஜீவதயவு வேள்வியின் பயனால் ஜீவதயவு பெருகி பெருகி, ஜீவதயவே வடிவான முருகப்பெருமானின் ஆசியை முழுமையாகப் பெற்று, பசிப்பிணியாற்றும் வேள்வி செய்வோரை நிலை உயர்த்தி, மும்மலம் நீக்கி குற்றமற்றவனாக்கி அவனை ஞானியாகவும் ஆக்கிவிடும் என்பதையும் அறியலாம்.