News
JANUARY 2023
குரு உபதேசம் – 3561
முருகா என்றால், முதல் மொழியாம், தன்னிகரற்ற மூத்த மொழியாம், ஞானமளிக்கும் மொழியாம், தத்துவார்த்த மொழியாம், தன்னை காப்பாற்றிக் கொள்ள வல்லதும், தன்னை கற்போரையும் காப்பாற்றும் வல்லமை மிக்கதுமான உயிர் மொழியாம் ஞானத்தலைவன், தவத்தால் தோன்றிய தனி மொழியாம் தமிழைக் கற்க கற்க, தலைவன் முருகன் ஆசியைப் பெறலாம் என்பதையும், தமிழைக் கற்பவர் இக வாழ்வாகிய இல்லற வாழ்விற்கு தேவையான பொருளாதாரத்தையும், வேலை வாய்ப்பையும் இனிவரும் ஞானசித்தர் காலமதனிலே உறுதியாக பெறலாம் என்பதையும், இகவாழ்வை தருகின்ற தமிழே ஞானமாய் மாறி ஞானமளித்து பரவாழ்வையும் தரும் என்கிற பேருண்மையையும் அறிவதோடு ஞானம் பெற வேண்டுமாயின் அது எவராயினும் சரி, தமிழைக் கற்றால்தான் ஞானத்துறைக்கே வர முடியும் என்பதையும் அறியலாம்.