News
MARCH 2023
குரு உபதேசம் – 3629
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
முருகப்பெருமானால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கே தர்ம°தாபனத்தில் தொண்டுகள் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி முருகப்பெருமானால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டர்கள் மீது குறை காண்பவர்கள் முருகப்பெருமானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதையும், தொண்டர்களிடையே உள்ள குறைகளை பெரிதுபடுத்தாமல் இது சகஜம் என்றும், சாந்தமாக இருந்து செயல்புரிய வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாமல் குறைகள் கூறினால் தர்மசெயல்கள் பாதிக்கப்படும் என்றும், தர்மம் பாதித்தால் தர்மதேவனாகிய முருகப்பெருமான் நம்மை தண்டிப்பான் என்பதையும் உணர்ந்து குறைகளை பொறுத்துக் கொண்டு சகஜ சாந்த மனோபாவத்துடன் நடந்து கொள்வார்கள்.