News
MARCH 2023
![](https://www.agathiar.in/wp-content/themes/generatepress/assets/images/arrow-left.png)
குரு உபதேசம் – 3636
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
பிறர் செய்த குற்றத்தை மன்னித்தல், மறத்தல், மனம்விட்டு பழகி நட்பை பெருக்குதல் ஆகிய அனைத்து நற்பண்புகளையும் முருகப்பெருமான் ஆசியால் பெறலாம் என்பதை அறியலாம். முருகப்பெருமானது ஆசியை பெற, முதலில் ஜீவதயவுடையவராய் ஆதல் வேண்டும். உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். தினம் தினம் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ தவறாமல் பூஜைகள் செய்து முருகனது ஆசியைப் பெறவும், மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும் என்கிற ஜீவதயவு செயலை வளர்த்தும் தொடர்ந்து மறவாது செய்ய செய்ய, முருகனது அருளைப் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
![](https://www.agathiar.in/wp-content/themes/generatepress/assets/images/arrow-right.png)