News
MAY 2023
குரு உபதேசம் – 3681
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
மனிதன் கடவுள் தன்மையை அடைவதற்கான மார்க்கத்தை முதன் முதலில் கண்டுபிடித்தவன் முருகப்பெருமானே ஆவார் என்பதை அறிந்து தெளிந்து உணரலாம்.
உலக மக்கள் மாணவர்களாக இருந்தபோது பள்ளிகளில் தக்கமுறையில் பக்திநெறியையும், புண்ணியத்தின் அவசியத்தையும் போதிக்காத காரணத்தினாலே தான், மாணவர்களிடத்து பக்தி இல்லாமல் போய் பாவ புண்ணியங்களை அறியாது, தீய நெறியில் சென்றதாலே இவ்வுலகினில் புண்ணியம் குறைந்து இயற்கை சீற்றங்கள் உண்டாவதை அறியலாம்.