News
JULY 2023
குரு உபதேசம் – 3739
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… அரிய ஞானநூல்களை கற்கவும், அறியவும், பின்பற்றவும் கடைத்தேறவும் வாய்ப்புகள் கிடைக்கும்.
இவற்றிற்கு அடிப்படையாய் உள்ள புண்ணிய பலத்தை சேர்க்கவும், தயவினை பெருக்கி தயவுடையோனாய் ஆகிடவும், தயவுடை தலைவன் ஞானத்தலைவன் முருகனது திருவடிகளை தொடர்ந்து பற்றி பூஜைகள் செய்யவும், பிற உயிர்கள் படும் துயரம் கண்டு இரங்கவும்வல்ல வல்லமைகளையும் முருகனே அருள்வான்.
முருகப்பெருமானின் ஆசியை பெறவிரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து சுத்த சைவ உணவை கடைப்பிடித்து, காலை மாலை இரவு ஒரு பத்து நிமிடமேனும் முருகப்பெருமானின் திருநாமங்களான “ஓம் முருகா” என்றோ, “ஓம் சரவணபவ” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி போற்றி” என்றோ பூஜைகள் செய்தும், வாரம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் வருவது அவசியம் என்பதும் உணர்த்தப்பட்டு அதன் வழி நடந்து முருகனது திருவடி பற்றி, பூஜித்து ஆசி பெற்று முருகனது தயவினைப் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.