News
JULY 2023
குரு உபதேசம் – 3745
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இதுவரை இவ்வுலகினில் வழக்கமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததும், முன்னோர்கள் செய்தது என மூடநம்பிக்கையாக பின்பற்றப்பட்டு வந்ததுமான, நடுக்கல் வணக்கம், சிறுதெய்வ வழிபாடு, உயிர்ப்பலி இடுதல், செத்துப்போன மனிதனை கடவுளாய் வணங்குதல், வீண் ஆரவார புறச்சடங்குகள், அர்த்தமற்ற வெறிச்செயல் பூஜைகள் என மனிதனை பாவியாக்கும் அனைத்து செயல்பாடுகளும் முருகனது அருளாக்கினையால் இனி இவ்வுலகினின்று வழக்கொழியும். இனி முருகனின் உத்தம பூஜையாம் ஞானியர் திருவடி பூஜையும், ஜோதி வழிபாடும் நிலைத்து, உயிர்ப்பலி இடுதல் அற்ற சுத்த சைவ உணவு முறையும், பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தல் எனும் ஜீவதயவு செயல்களுமே இறைவனை அடைய ஏதுவான வழிமுறைகளாக உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன், ஒரே வழிபாட்டு முறை, ஒரே தேசம், ஒரே நீதி, ஒரே தர்மம் என அனைத்தும் அனைவருக்கும் சமமானது எனும் சமரச சுத்த சமத்துவமும், சமரச சுத்த சன்மார்க்கமும் செழித்து ஓங்கி வளர்ந்து உலகமெலாம் முருகப்பெருமானின் அருளொளி பரவி அநீதிகள் அடக்கப்பட்டு நீதி நிலைநிறுத்தப்பட்டு உலகமே அமைதியும், வளமும், பசுமையும் ஓங்கி சொர்க்கமான ஞானயுகம் அமையும் என்பதை அறியலாம்.