News
JULY 2023
குரு உபதேசம் – 3767
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. சாகாக் கல்வி எனும் மரணமிலாப் பெருவாழ்வையும் அதன் தலைவன் முருகப்பெருமான்தான் என்பதையும் அறியலாம். மரணமிலாப் பெருவாழ்வை அடையும் மார்க்கத்தை அறிய வேண்டுமாயின் ஞானத்தலைவன் முருகனது ஆசியைப் பெறவேண்டும் என்பதும், முருகனது ஆசியைப் பெற தினம் தினம் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் “ஓம் முருகா” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ மனம் உருகி நாமஜெபமாகிய பூஜைகளை செய்தும், உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டும் வாரம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் வரவர முருகனது ஆசியையும், சாகாக்கல்வியையும் பெறலாம்.