News
AUGUST 2023
குரு உபதேசம் – 3770
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. காலை எழும் போதே ஓம் அகத்தீசாய நம என பன்னிரண்டு முறையேனும் சரி. படுக்கையிலிருந்து எழுந்து அகத்தீசனை பூஜித்து ஆசி பெற்று வாழ்ந்திட அவர்கள் எந்த துறையை சார்ந்தவராய் இருப்பினும் விவசாயம், உத்யோகம், தொழில், ஆன்மீகவாதி, இல்லறத்தான், துறவறத்தான் என அவர் எதை மேற்கொண்டாலும் அவர் மேற்கொள்கின்ற எல்லா செயல்களும் வெற்றியடையும். அதேசமயம் அவர்களின் நீதிக்கு புறம்பான செயல்களுக்கு ஞானிகள் துணை வர மாட்டார்கள்.